தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகரில்  நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி: மர்ம நபர் ஓட்டம்

விருதுநகரில் பட்டபகலில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர் பொதுமக்கள் கூட்டமாக வந்ததால் தப்பியோடினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:05 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பட்டபகலில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர் பொதுமக்கள் கூட்டமாக வந்ததால் தப்பியோடினார்.

விருதுநகர் அல்லி தெருவைச் சேர்ந்தவர் வைரமணி என்பவரின் மனைவி செல்லத்தாயி(40). இவர் சொந்தக்காரர் வீட்டு நிகழ்ச்சிக்கு வெள்ளிக்கிழமை சென்று விட்டு, கட்டபொம்மன் தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தாராம். அப்போது, பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென செல்லாத்தாயின் கழுத்தில் கிடந்த 3 சவரன் நகையை பறித்தாராம்.

அப்போது, நகையை விடாமல் மர்ம நபர் தாக்குதலில் தப்பிக்க போராடியதோடு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை சத்தம் போட்டு உதவிக்கு அழைத்துள்ளார். பொதுமக்கள் ஓடி வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் தப்பியோடினாராம்.

இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் செல்லத்தாயி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் கிடந்த நகை பறிக்க முயற்சி செய்த மர்ம நபர் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.